குருவே சரணம்

மக்களை பாதுகாக்கவும், இவ்வுலகில் அவர்களுக்கு ஏற்படுகின்ற துன்ப துயரங்களை போக்கவும், அவர்களின் வாழ்க்கையை நல்வழிப் படுத்தவும் பரமாத்மா சத்குருக்களை இவ்வுலகில் தோற்றுவிக்கிறார். சத்குரு என்பவர் எங்கும் நிறைந்திருப்பவர், எல்லாம் அறிந்தவர், சர்வ ஞானம் பெற்றவர், சர்வ வல்லமை படைத்தவர். இவைதான் சத்குருவின் அடையாளம். அப்படி ஒருவர்தான் நம் மகான் சின்னதிருப்பதி (சேலம்), ஆனந்த துவாரகாவில் வீற்றிருக்கும் அருட்திரு ராமன் ஸ்வாமிகள், இவ்வுலகில் தோன்றி நம்மை காக்க வந்திருக்கும் மகான்.

அனைத்து மதத்தினரும், சாதியினரும், அனைத்து மாநிலங்களிலிருந்தும், அண்டை நாட்டிலிருந்தும், அனைத்து தரப்பிலான மக்கள் ஸ்வாமிஜியை சந்தித்து அருள் பெறுகின்றனர். சத்குருவை சந்திப்பவர்களும், நிந்திப்பவர்களும் ஆத்ம ஞானம் மற்றும் அமைதியை பெறுகின்றனர்.

அனைத்து மதத்தினருக்கும் ஒரே கோட்பாடுதான், தாங்கள் வணங்கும் தெய்வத்திடம் பரிபூரண பக்தியை வெளிப்படுத்துவதும் மற்றும் ஆண்டவருக்கு தொண்டு செய்வதும்தான். இவ்வாறு செயல்படுபவர்களை மகாத்மா என்றே அழைக்கலாம். அனைத்து மகான்களும், வேதங்களிலும் சொல்லப்படுகின்ற நீதி: மகாத்மா என்ற நிலைக்கு வந்துவிட்டால் உங்களிடம் இருக்கும் துன்ப துயரங்கள் முற்றிலும் நீங்கிவிடும். இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளும் வாழ்நாள் முழுவதும் துன்பம் இல்லாமல், வாழ்வில் அதிருப்தி ஏற்படாமல் வாழவே ஆசைப்படும். ஆனால் அத்தகைய சூட்சமான நிலையை அடையவேண்டும் என்றால் அந்நிலை எங்கிருக்கிறது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு இருக்கும் புகலிடம் நோக்கி செல்லவேண்டும். நம்து துன்பத்தை போக்கும் குரு யார் என்பதை கடவுள் மட்டும்தான் உங்களுக்கு வழிகாட்டுவார், காட்டமுடியும்.

சீரடியில் வீற்றிருக்கும் சாய்பாபாவினாலும், குரு தத்தாத்ரேயராலும் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான் அருட் திரு ராமன் ஸ்வாமிஜி. மேலும் உலகில் உள்ள பல கடவுள்களாலும், மகான்களாலும் பூரண ஆசியை பெற்றவர் ஆவார்.

அனுதினமும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களிலிருந்து மீட்டு அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் வசந்தத்தையும் ஏற்படுத்துகிறார். ஒருமுறை “ஆனந்த துவாரகா”வில் காலடி வைத்து ஆனந்தத்தை அடைந்த மக்களை அங்கே காணலாம்.

Copyright © www.aruloliramanswamiji.com. All Rights Reserved. Bookmark and Share Guruvae Saranam: