அருள் வாக்கு

ராமன் ஸ்வாமிஜி, தெய்வீக சீலர், தெய்வீகத் தன்மை பெற்றவர், அன்பு நிறைந்தவர், அனைத்து வித மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்தும், தீய சக்திகளால் ஏற்படுகின்ற ஆபத்துகளில் இருந்தும், துயரங்களிலிருந்தும், அவருடைய சன்னிதானமான ஆனந்த துவாரகாவில் கால் பதித்தவுடனே அனைத்தும் உடனடியாக முற்றிலும் நீங்கிவிடும். எங்கிருந்தாலும் நம் மனதால் நினைத்தாலே போதும் நம்முடைய பிரச்சனைகள் விலகி ஓடிவிடும்.

ஸ்வாமிஜியின் சன்னிதானமான “ஆனந்த துவாரகா”விற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு செல்கின்றனர். எப்பொழுதும் ஸ்வாமிஜி அவர்கள் கூறுவார், “நாணயத்தில் உள்ள இரண்டு பக்கங்கள் மாதிரி மனித வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று அதிருஷ்டம், மற்றொன்று துரதிருஷ்டம்”

அதிருஷ்டம்: துன்பமில்லாத, நோய் நொடியில்லாத வாழ்க்கை, நற்பண்பு, அரசியலில் வெற்றி, செல்வ செழிப்பு உள்ள வாழ்க்கை, நல்ல கல்வி, உத்யோகம், வேலை, நல்ல மனநிலை, நல்ல பண்பான மனைவி, நல்ல மக்கட்செல்வங்கள், பரிவுமிக்க நண்பர்கள் மற்றும் பாசம் உள்ள உறவினர்கள் மற்றும் இவ்வுலகில் சந்தோஷமான வாழ்க்கை இவற்றை அனுபவிப்பதே அதிருஷ்டம் ஆகும்.

துரதிருஷ்டம்: துன்பம், துயரம், இடர்பாடுகள், நோய் நொடியுள்ள வாழ்க்கை, சரியில்லாத மனநிலை, நிதி பற்றாக்குறை, அழகில்லாத, கெட்ட நிலையிலுள்ள குழந்தைகள், பண்பில்லாத மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகை, நற்கதியின்மை இவைகள் துரதிருஷ்டம் ஆகும். இவை அனைத்தும் கர்ம வினைகளால் ஏற்படக்கூடியவை.

கர்ம வினைகள்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நிச்சயம் செய்கிறது. ஸ்வாமிஜி அவர்கள் அதிசயத்தக்க விதத்தில் உடல் நிலை, மனநிலை, செல்வ நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும் விதத்தில் நல்லாசி வழங்குகிறார். அவருடைய நல்லாசியால் பல லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர தீர்வு பெற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்களுக்கு கல்யாண நிகழ்வுகள் ஸ்வாமிஜி அவர்களின் அருளால் நடைபெற்றுள்ளது. அவருடைய சந்நதியில் வந்த பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையில் துன்பத்தில் இருந்து மீண்டுள்ளனர். என்ன பிரச்சனைகளானாலும் ஸ்வாமிஜியின் சந்நதிக்கு ஒருமுறை வந்து நிரந்தர தீர்வு பெற்று செல்லவும். தினமும் அவருடைய “அருள் வாக்கு” கேட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைந்துள்ளனர்.

அருள் வாக்கு பெற . . .
Copyright © www.aruloliramanswamiji.com. All Rights Reserved. Bookmark and Share Guruvae Saranam: